முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செம்மலைக் கிராமத்தில் யானைகள் இரண்டு பாழடைந்த துரவு ஒன்றுக்குள் வீழ்ந்துள்ள நிலையில் வெளியில் வரமுடியாது தவிக்கின்றன.
செம்மலையின் புளியமுனைப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் துரவு ஒன்றிலேயே குறித்த யானைகள் விழுந்து சகதிக்குள் சிக்கியிருக்கின்றன.
சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1