25.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

மன்னாரில் பாடசாலை மாணவர்களை அடித்து நொருக்கிய அதிபர்: 4 மாணவர்களிற்கு காயம்!

வாய்ப்பாடு அட்டை கொண்டு செல்லவில்லையென பாடசாலை அதிபர் கொடூரமாக தாக்கியதில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

மன்னார் சிலாவத்துறை முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. தாக்குதலில் காயமடைந்த 4 மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

11 வயதான மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், குறித்த அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரியும் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனுக்கு இன்று திங்கட்கிழமை (3) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரினால் அப்பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலையில் வைத்து கடந்த 27 ஆம் திகதி கடுமையாக தாக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சிறுவர் துஸ்பிரயோக மையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரின் விசாரனையின் பின்னர் வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழின் பிரகாரமும் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப் பட்டுள்ளோம்.

ஆகவே நாம் நீதிமன்றத்தை நாடிச் செல்லாது சுமூகமான தீர்வை ஏற்படுத்திக் கொள்ள உடனடியாக குறித்த அதிபரை இடமாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

குறித்த அதிபர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட வேண்டியவர். இவ் அதிபர் தொடர்பாக ஏற்கனவே மன்னார் வலயக்கல்வி அலுவலகம், வடமாகாண கல்வி அமைச்சு, வடமாகாண ஆளுனர் ஆகியோருக்கு பல தடவைகள் முறைப்பாடு செய்தும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

சுமார் 8 வருடங்களுக்கு மேலாக அதிபர் தகைமை அற்ற ஒர் ஆசிரியர் ஒரு பாடசாலையில் இத்தனை வருடங்கள் அதிபராக கடமையாற்றுவது வட மாகாண கல்வி அமைச்சின் செயல் திறன் குறித்து கேள்விகள் எம்முள் எழுப்புகின்றது.

வார்த்தைப் பிரயோகம், ஒழுக்க நெறிமுறைகளை பின் பற்ற முடியாத ஒருவர் அதிபராக கடமையாற்றுவது என்பது எவ்வாறு கல்வி ஒழுக்க விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் சரியான வகையில் எடுத்துச் செல்லப்படுகின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இவர் தொடர்ந்தும் அதிபராக கடமையாற்றும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர் காலத்தின் மீதும் பெற்றோர்களான எங்கள் மீதும் கொண்டுள்ள காழ்புணர்ச்சி அதிகரிக்கப்பட்டு மாணவர்களின் மனங்களிலும், கல்வியிலும் பாரிய பின்னடைவை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே குறித்த அதிபர் இப்பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யாத பட்சத்தில் மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடை விலகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே பாடசாலை மற்றும் மாணவர்களின் எதிர் கால நலனை கருத்தில் கொண்டு குறித்த அதிபரை இடமாற்றம் செய்து மாணவர்களின் மனங்களில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

மூன்று இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு

east tamil

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

Leave a Comment