வனப்பகுதியில், குட்டி யானை ஒன்று தனியாக விளையாடி மகிழும் வீடியோ!

Date:

யானைகள் என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான விசயம் ஆகும். இதிலும் குட்டி யானைகள் என்றால், நம் மனம் அடையும் ஆனந்தத்துக்கும் எப்போதும் அளவே இல்லை. குட்டி யானை ஒன்று வனப்பகுதியில் தனியாக விளையாடி மகிழும் வீடியோ, டுவிட்டர்வாசிகளிடையே பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்றும் சோக காலத்தில், நம் மனதிற்கு இதம் அளிக்கும் விதமாக, இந்த வீடியோ அமைந்துள்ளது என்று கூறினால், அது மிகையல்ல.

வனப்பகுதியில், எவ்வித விலங்கும் இல்லாததால், குட்டி யானை ஒன்று, வைக்கோல் கட்டுடன் தனியாக விளையாடி மகிழும் வீடியோவை, இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோவிற்கு தலைப்பாக, இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?… தனியாக இருங்கள், விழிப்புடன் இருங்கள். வீட்டிலேயே ஆனந்தமாக இருந்தால், கொரோனா தொற்று பரவல் சஙகிலியை நாம் கட்டுப்படுத்தலாம் என்பதே இதற்கான பதில் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 3.8 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், மாஸ்க் அணிந்தும், அடிக்கடி சானிடைசரை கொண்டு கைகளை கழுவி வந்தாலே, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை குறிவைக்கும் பொலிசார்

குறைபாடுள்ள அல்லது சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும்,...

ஜனக பெரேரா கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

அனுராதபுரத்தில் 2008-ஆம் ஆண்டு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற மேஜர்...

2000 பேர் பலி: பதற வைக்கும் வெனிசுலா நிலவரம்!

கிட்டத்தட்ட 2,000 பேரைக் கொன்ற இரண்டு பேரழிவுகரமான நிலநடுக்கங்களுக்குப் பிறகு, வெனிசுலாவில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்