தடுப்பூசிக்கும் ‘தண்ணி’ காட்டிய கொரோனா: வவுனியாவில் சம்பவம்!

Date:

வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையின் நோயாளர் காவு வண்டியின் சாரதியாக பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியாவை சேர்ந்த குறித்தசாரதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.

அதன் முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. அதனடிப்படையில் குறித்த சாரதிக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர் வவுனியாவில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளர்களை, கொரோனா வைத்தியசாலைக்கு ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோசை ஐனவரி மாதமும், இரண்டாவது டோசை நேற்று முன்தினமும் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம்

ஹெனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்ஜோடி உயிரிழந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இந்த...

மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல்

கெஸ்பேவ-கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில் 'மெட்ரோ' (Metro) பேருந்துடன் வேண்டுமென்றே...

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்