கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், துன்னாலை மேற்கில் சுகாதார அறிவுறுத்தலை மீறி கிரக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட சுமார் 30 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
துன்னாலை மேற்கு ஞானம்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி நடைபெற்று வந்துள்ளது. தற்போதைய கொரோனா சூழ்நிலையினால், பயிற்சி நடவடிக்கையை இடைநிறுத்தம்படி பிரதேச சுகாதார பரிசோதகர் அறிவித்திருந்தார்.
எனினும், அதையும் மீறி இன்று காலை பயிற்சி நடந்தது.
இதையடுத்து நெல்லியடி பொலிசாருக்கு சுகாதார பரிசோதகர் தகவல் வழங்கினார். பொலிசார் சென்ற போது, பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்று விட்டனர்.
பயிற்சியாளர் நெல்லியடி பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு எச்சரிக்கப்பட்டார். அவரிடம் பெற்ற விபரத்தின் அடிப்படையில், பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
பயிற்சியாளர் உள்ளிட்ட சுமார் 30 பேர் வரையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.