சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன்;கலாய்க்கும் நயன்தாரா ரசிகர்கள்!

Date:

சமந்தாவின் பிறந்தநாளுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கும் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து அழகான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

சமந்தா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் மற்றவர்களோ வேறு மாதிரி விமர்சித்துள்ளனர்.
நயன்தாரா ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
இந்த மேட்டர் தலைவிக்கு தெரியுமா? உங்களை மலை போன்று நம்புகிறார். துரோகம் பண்ணாதீங்க அன்பான இயக்குநரே. இது மட்டும் நயன்தாராவுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என கலாய்த்துள்ளனர்.
அவர் ஏதோ தன் பட ஹீரோயினாச்சே என்கிற பாசத்தில் ஒரு வீடியோவை வெளியிட அது இப்படி வம்பாகிவிட்டது. இப்படித் தான் விக்னேஷ் சிவன் முன்னதாக தன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சூரிய ஒளியை ரோஷ்னி என்று கூற அதை பார்த்தவர்களோ, யார் அந்த ரோஷ்னி, தலைவிக்கு துரோகம் செய்யாதீர்கள் என்றார்கள்.

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா நாளுக்கு நாள் எலும்பும் தோலுமாக ஆகிக் கொண்டிருப்பது ரசிகர்களை கவலை அடையச் செய்திருக்கிறது.

நயன்தாரா தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அண்ணாத்த தவிர்த்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவரவர் படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களோ, நயன்தாராவை எப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று விக்னேஷ் சிவனிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்