கல்முனை பொலிஸ் பிரிவின் மருதமுனை பகுதியில் போலி இலக்கத்தகடுகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதமுனை பகுதியில் வாகனமொன்றை விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்ட போது போலி இலக்கத்தகடுகள் கைப்பற்றப்பட்டன. வாகனத்தில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னால் வந்த வாகனமொன்றில் இருந்து மூன்று கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மாளிகாவத்தை, தெஹிவளை மற்றும் கிராண்ட்பாஸில் வசிப்பவர்கள்.
இரண்டு வாகனங்களும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1