அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட பல கோடி மோசடி பணம்: திருகோணமலை நபர் கைது!

Date:

அமெரிக்காவிலிருந்து செயற்படும் இலங்கை பின்னணியுடையவர்களை கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட நிதி குற்றங்களில் ஈடுபடும் குழுவுடன் இணைந்து செயற்பட்ட திருகோணமலையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை டுபாய் செய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற அவரை சிஐடியின் நிதிக்குற்றப் பிரிவினர் கைது செய்தனர்.

அந்தோனிதாஸ் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து அவரது வங்கிக் கணக்கிற்கு 86 மில்லியன் ரூபா அனுப்பப்பட்டுள்ளது. பின்னர், அவர் பல்வேறு வங்கிக் கணக்குகளிற்கு 73 மில்லியன் ரூபாவை வைப்பு செய்துள்ளார். அவரது வங்கிக்கணக்கில் மிகுதி பணம் வைப்பிலிருந்தது.

2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் உள்ள பல்வேறு நபர்களுக்கு ரூ .1,440 மில்லியன் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட நிதி குற்றக்கும்பல் அமெரிக்க வங்கிகளில் மோசடி செய்து பணத்தை இலங்கையிலுள்ளவர்களின் வங்கி கணக்குகளிற்கு மாற்றம் செய்கிறார்கள். அந்த பணத்தை மீளவும் திருட்டு கும்பலின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டு, இலங்கையிலிருந்து செயற்படுபவர்களிற்கு பெருந்தொகை பணம் சன்மானம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

.

spot_imgspot_img

More like this
Related

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...

தென்னக்கோன் உள்ளிட்ட 9 பொலிஸ்காரர்களிற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக,...

ஊரான் வீட்டு பணத்தில் ஸ்வீட் சாப்பிட்ட மஹிந்த குடும்பம்: நீதிமன்றத்தில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மகளிர் பிரிவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்