வட மாகாணத்தில் இன்று 25 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீடத்தில் 454 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து தலா 7 பேரும், மன்னார், வவுனியா மாவட்டங்களில் இருந்து தலா 4 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும தொற்றிற்குள்ளாகியுள்ளதாக வடக்கு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில்- திருநெல்வேலி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி, யாழ் பேதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர்,
வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா வர்த்தகர்களிடம் எழுமாற்றாக நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் ஒருவர், வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 2 பேரும், பூவசரங்குளம் வைத்தியசாலையில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மன்னார் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
முல்லைத்தீவு, மாங்குளம், மல்லாவி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகினர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.