வவுனியாவில் தனியார் வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் எழுமாறான வகையில் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள சில வியாபாரநிலையங்களில் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பலரிடம் பெறப்பட்டிருந்தது.
அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது. அந்த வகையில் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருந்துவனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1