26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை தீர்க்க விரும்பாமலா மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை?: டக்ளஸிற்கு வந்த திடீர் சந்தேகம்!

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும்  எமது கையை பலப்படுத்தினால் அரசியல் கைதிகளின் விடுதலை உடனடியாக இடம்பெறும் என்றேன் அது விருப்பமில்லாமலே மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என  மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பற்று பதில் வழங்கியுள்ளார்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில்  காலை பதினோரு மணியளவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது

இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் அரசியல் கைதிகளின் விடுதலை தெடர்பில் பலர் உங்களிடம் நேரடியாகவே வருகைதந்து கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில்  உள்ளது என வினவினார்

இதற்க்கு பதிலளித்த மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல பலருக்கு பலவிதமான அபிப்பிராயங்கள் இருக்கிறது நடந்து முடிந்த  ஜனாதிபதி தேர்தலிலும் நடந்து முடிந்த  பாராளுமன்ற தேர்தலிலும் நான் மக்களிடம் கேட்டிருந்தேன் அரசியல் கைதிகள் தொடர்பாக எனக்கு கூடின வாக்குகளையும் கூடின ஆசனங்களையும் தருமாறு கேட்டிருந்தேன் அப்படி தந்திருந்தால் இந்த பிரச்சனையை உடனடியாக தீர்ப்பேன் என்றும் சொல்லியிருந்தேன் ஆனால் மக்கள் அந்த பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லையோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது என்றார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

east tamil

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

east tamil

கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்

east tamil

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

Leave a Comment