அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிகப்பெரிய இந்து ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு கோடி டொலர்கள் செலவில் நிர்மாணிப்படவுள்ளது.
இந்த ஆலயம், முழுமையாக நிர்மாணித்து நிறைவுபெறுவதற்கு ஒன்பது வருடங்களாகலாம் என்றும் முதல்கட்ட வேலைகள் 2023 இல் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலயத்தை வடிவமைப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள DDC Architecture and Interior Design நிறுவனம், ஆலய நிர்மாணத்துக்கான வடிவத்தை இந்தியாவுக்கு சென்று நுட்பமாக ஆராய்ந்து வந்ததாகவும், இதன்பிரகாரம் ஆலய வரைபடத்தை வடிவமைப்பதற்கு மூன்று வருடங்கள் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 25 மீற்றர் உயரத்தில் அமையவுள்ள இந்த ஆலயத்துடன், இரண்டு மாடிகள் கொண்ட இரண்டு சமூக மண்டபங்களும் கட்டப்படவுள்ளன என்றும் அவற்றுடன் வாகன தரிப்பிடம் மற்றும் பூங்காவும் ஆலயத்துடன் இணைந்துகொள்ளும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.
சமூக மண்டபங்கள் சுமார் இரண்டாயிரம் பேருக்கானதாக அமையும் என்றும் இந்த மண்டபங்களுடன் அமையவுள்ள சாப்பாட்டு மண்டபம் ஆயிரம் பேரைக்கொள்ளக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.