24.7 C
Jaffna
February 4, 2023
சினிமா

நீங்கள் இல்லை என்கிற உண்மை மனமெங்கும் அதிர்வையும்,வலியையும் உண்டாக்குகிறது;சூர்யா இரங்கல்!

இயக்குநர் கேவி ஆனந்த மரணமடைந்ததைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு ஒளிப்பதிவாளர் – இயக்குனர் கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் காலமானார்.

இந்த செய்தி திரையுலகை மட்டுமல்லாது பொது மக்கள் எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், இவரின் 5 நிமிடம் மட்டுமே வீட்டில் வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்கள் பலரும் வெளியில் வர இயலாமல், எல்லோரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கே வி ஆனந்த் சார். இது பேரிடர் காலம் என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள் இல்லை என்கிற உண்மை மனமெங்கும் அதிர்வையும், வலியையும் உண்டாக்குகிறது. ஏற்க முடியாத உங்கள் இழப்பின் துயரத்தில் மறக்க முடியாத நினைவுகள் அலை அலையாக உயிர்த்தெழுகின்றன.

நீங்கள் எடுத்த புகைப்படங்களில் தான் சரவணன் சூர்யாவாக மாறிய அந்த அற்புதத் தருணம் நிகழ்ந்தது. முன்பின் அறிமுகமில்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம்பிடித்துவிட வேண்டுமென இரண்டு மணிநேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன். மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் அந்த இரண்டு மணிநேரம் ஒரு போர்க்களத்தில் நிற்பதைப் போலவே உணர்ந்தேன்.

நேருக்கு நேர் திரைப்படத்திற்காக நீங்கள் என்னை எடுத்த அந்த ரஷ்யன் ஆங்கிள் புகைப்படம் தான் இயக்குநர் திரு வசந்த், தயாரிப்பாளர் திரு மணிரத்னம் உள்ளிட்ட அனைவருக்கும் என்மீது நம்பிக்கை வர முக்கிய காரணம். புகைப்படத்தை விட பத்தாயிரம் மடங்கு பெரியதாக முகம் தோன்றும், வெள்ளித்திரையிலும் நடிகனாக என்னை படம்பிடித்ததும் நீங்கள் தான்.

முதன் முதல் என் மீது பட்ட வெளிச்சம் உங்கள் கேமிராவில் இருந்து வெளிப்பட்டது. அதன் மூலம் தான் என் எதிர்காலம் பிரகாசமானது. என்னுடைய திரையுலகப் பயணத்தில் உங்களின் பங்களிப்பும் வழிகாட்டலும் மறக்க முடியாதது. வளர்ச்சிக்கு நீ இதையெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என அன்புடன் அக்கறையுடன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என்னை வழிநடத்துகின்றன.

இயக்குநராக அயன் திரைப்பட த்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பு ஒரு மாபெரும் வெற்றிக்காக காத்திருந்த எனக்குள் புதிய உத்வேகத்தை அளித்தது. அயன் திரைப்படத்தின் வெற்றி அனைவருக்கும் பிடித்த நட்சத்திரமாக என்னை உயர்த்தியது என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

எனது முதல் திரைப்பட த்தில் நீங்களும், உங்களது கடைசி திரைப்பட த்தில் நானும் பணியாற்றியது இயற்கை செய்த முரண். எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார்…இதயப்பூர்வமான நன்றி அஞ்சலி… நினைவுகளுடன் சூர்யா என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘விஜய் 67’ படத்தின் தலைப்பு ‘லியோ’ – ப்ரோமா வீடியோ

Pagetamil

பத்து தல படத்தின் ‘நம்ம சத்தம்’ பாடல்

Pagetamil

8 நாட்களில் ரூ.667 கோடியை வசூலித்த ஷாருக்கானின் ‘பதான்’

Pagetamil

சூர்யாவின் மற்றொரு ஜோடி மிருணாள் தாக்கூர்

Pagetamil

14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்கும் த்ரிஷா!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!