26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலையில் எகிறும் தொற்று: புதிய சிகிச்சை மையங்கள் உருவாக்கம்!

திருகோணமலை மாவட்டத்தில் கோரானா நோயாளர்கள் தொகை அதிகரித்துவரும் நிலையை கருத்திற் கொண்டு வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஜி.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தில் கோரானா நோயாளர்களுக்கான வைத்திய தேவைகளுக்காக இரண்டு வைத்திய சாலைகளில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதற்கு மேலதிகமாக கோமரன் கடவல வைத்தியசாலையும் குறித்த நோய்க்கான சிகிச்சை வழங்கும் நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் எதிர்வரும் 10ஆம் திகதியிலிருந்து முழுமையான இயக்கத்துக்கு வரும்.

அதற்கு மேலதிகமாக கந்தளாய் சீனி தொழிற்சாலை மற்றும் மாவட்ட இளைஞர் அபிவிருத்தி திட்டங்களுக்கான கட்டடங்களையும் மேலதிக சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிய 53 தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17, உப்புவெளி 19, மூதூர் 11, தம்பலகாமம் 6, அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில் 53 கொரோணா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அதிக தொற்று பரவல் நிலவும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றபடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் நோய் தோற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் முடக்க நிலை அறிவிக்கப்படக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

குகதாசன் கண்டனம்

east tamil

திருகோணமலையின் புதிய அரசாங்க அதிபராக மீண்டும் சிங்களவர் நியமனம்

east tamil

தொடரும் திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் சிறப்பு வேலைத்திட்டம்

east tamil

அம்பாறையில் நல்லிணக்கத்தின் தேசிய தரவுகளைப் பகிரும் பயிற்சி பட்டறை

east tamil

Leave a Comment