திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 500 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள் குச்சவேலி மற்றும் இச்சலம்பத்து ஆகிய கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில் குறித்த சிகிச்சை நிலையங்களில் 160 நோயாளர்களுக்கு மாத்திரமே இடவசதி உள்ளது.
ஏனைய நோயாளர்கள் மாவட்டத்தின் வௌி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அதேபோல், இடைநிலை சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தக்கூடிய இடங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1