சீன தூதர் இலங்கை வந்திருந்த சமயத்தில் அவரது வாகன தொடரணிக்காக பொரளை வீதி மூடப்பட்டிருந்த சமயத்தில், சாரதிகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஊக்கப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (27) பொரளை பகுதியை கடந்து சென்ற சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங்கின் வாகன தொடரணிக்கு வாகன சாரதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வீதி மூடப்பட்டு, விசேட பிரமுகர்கள் வாகன தொடரணி பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதிகள் ஹோர்ன் சத்தத்தை ஒலிக்க விட்டு, ஹூ சத்தம் எழுப்பினர்.
சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய பொலிசார் பத்தரமுல்லையை சேர்ந்த ஒருவரை நேற்று மாலை கைது செய்தனர்.
பொலிசாரின் கடமைக்கு இடையூறு செய்தமை, பொதுமக்கள் சட்டவிரோதமாக கூடுவதற்கு உதவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
அவரது நடவடிக்கைகள் நாட்டிற்கு வருகை தரும் பிரமுகருக்கும் அவரது காவலர்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கருதப்படுகிறது என்றும் கூறினார்.