கல்முனை பிரதேச செயலகத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
நீண்டகாலமாக இழுபறியிலுள்ள கல்முனை விவகாரம் பற்றி இன்று ஆராயப்பட்டது.
கல்முனை பிரதேச செயலக விவகாரம் சம்பந்தமான கூட்டமானது எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையில் இடம்பெறவுள்ளது.
அந்த கூட்டத்தின் முடிவை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதென இன்று முடிவெடுக்கப்பட்டது.
இன்றைய கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ சுமந்திரன், கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன், ஆகியோர் தற்போதைய பிரதேச செயலாளராக செயற்படும் ரி.அதிசயராஜை சந்தித்து கலந்துரையாடினர்.
-பா.டிலான்-