வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தல் வாகனம் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு!

Date:

வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குடத்தனை பகுதியில் இன்று (30) அதிகாலை கடற்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான கன்ரர், மோட்டார் சைக்கிள்கள் வருவதை அவதானித்து, அவற்றை நிறுத்த உத்தரவிட்டனர்.

எனினும், சட்டவிரோத மணல் கடத்தல் வாகனங்களான அவை, நிறுத்தாமல் தப்பிச் சென்றன.

இதையடுத்து வாகனத்தின் மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

துப்பாக்கிச்சூட்டையடுத்து கன்ரர், மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடி விட்டனர்.

அவை மீட்கப்பட்டு பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தப்பியோடியவர்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்