கண்ணுக்கு மிளகாய்த்தூள் வீசி வாள்வெட்டு முயற்சி: 3 ரௌடிகள் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூன்று ரௌடிகள் வசமாக மாட்டிக் கொண்டனர்.

உண்ணாப்புலவு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மீது வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த நிலையில், வீட்டு உரிமையாளர் மீது தூள் வீசிவிட்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை வீதியால் சென்ற இளைஞர் ஒருவர் சம்பவத்தை அவதானித்துள்ளார்.

உடனடியாக ஊர்மக்களை அழைத்துள்ளார். இதையடுத்து, இரண்டு ரௌடிகள் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இவர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மூவரிடமும் விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...

தென்னக்கோன் உள்ளிட்ட 9 பொலிஸ்காரர்களிற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக,...

ஊரான் வீட்டு பணத்தில் ஸ்வீட் சாப்பிட்ட மஹிந்த குடும்பம்: நீதிமன்றத்தில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மகளிர் பிரிவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்