புதிய COVID-19 சோதனைக் கருவி மற்றும் முகக்கவசம் என்பவற்றை பெரதெனியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணர்த்தன தெரிவித்துள்ளார்.
தயாரிப்புக்களை சதொசா மற்றும் அரச வர்த்தக பொதுக் கழகம் வழியாக தயாரிப்புகளை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
‘ரெஸ்பிரோன் நானோ 99’ (Respirone NANO 99) என்ற முகக்கவசத்தை உலக சந்தையில் விற்பனை செய்யும் வழிகள் குறித்தும் அமைச்சு விவாதித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எந்த வைரஸ் அல்லது பக்டீரியாவையும் கொல்லக்கூடிய மேம்படுத்தப்பட்ட நானோ-வடிகட்டுதல் முறையில் முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு முகக்கவசத்தை குறைந்தது 25 முறை கழுவி பாவிக்கலாம். இந்த முகக்கவசத்தை அணிந்தவர் சுவாசத்தின் மூலம் கார்பன் டை ஒக்சைடை உள்ளீர்க்காமல் வடிகட்டி அழிக்கக்கூடியது.
புதிய COVID-19 சோதனைக் கருவி குறித்து கருத்துத் தெரிவித்த பெரதெனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ருச்சிகா பெர்னாண்டோ, சோதனை கருவிக்கு 1,500 ரூபாய்க்கும் குறைவாக செலவாகும் என்றும் வைரஸின் எந்த திரிபையும் அடையாளம் காணும் திறன் இருக்கும் என்றும் கூறினார்.
சோதனைகளின் முடிவுகளை இரண்டு மணி நேரத்திற்குள் பெற முடியும், இந்த சோதனை கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் பி.சி.ஆர் சோதனைகளுக்கு அதிக பணம் செலவழிக்கப்படுவதைக் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் அனுமதி கிடைத்ததும் இந்த தயாரிப்பு உள்ளூர் சந்தைக்கு விடப்படும் என்றார்.