25 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

மன்னாரில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தல் ஆரம்பம்!

மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு 2ஆம் கட்ட கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.

மாவட்ட ரீதியில் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சுகாதார முன் கள பணியாளர்களுக்கு மேற்படி 2 ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்றது.

குறிப்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாவட்ட பொது வைத்திய சாலையில் பிரதான தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகையும் தலைமன்னார் எருக்கலம்பிட்டி, அடம்பன், முசலி பகுதிகளிலும் பிரதேச ரீதியாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.

அத்துடன் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கான மருத்துவ ஆலோசனை அடங்கிய துண்டு பிரதிகள் மற்றும் கையேடுகளும் வழங்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை தொடக்கம் எதிர் வரும் மூன்று தினங்களுக்கு குறித்த 2 ஆம் கட்ட தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

east tamil

கரட் விற்பனை சிக்கலில் பதுளை விவசாயிகள்!

east tamil

Leave a Comment