இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நாட்களாக 1,000 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நாளொன்றில் அதிக தொற்றாளர்கள் பதிவான நாளாக நேற்றைய தினம் பதிவாகியது.
நேற்று 1,466 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 104,953 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 1,419 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 99,245 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 15 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது 9,194 நபர்கள் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, 227 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,083 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,041 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.