2020இல் இராணுவத்திற்கு அதிக நிதி செலவிட்ட நாடுகள்!

Date:

2020ஆம் ஆண்டில் இராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களிலும் உள்ளன.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ உள்ளது. உலகளாவிய இராணுவ செலவினம் மற்றும் ஆயுத வர்த்தகத்தை இந்த நிறுவனம் கண்காணித்து வருகிறது. உலக நாடுகளின் இராணுவ செலவினம் தொடர்பான இதன் சமீபத்திய அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது.

இதன்படி கடந்த 2020ஆம் ஆண்டில் இராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியன முதல் மூன்று இடங்களிலும் உள்ளன. உலக நாடுகளின் ஒட்டுமொத்த இராணுவ செலவில் அமெரிக்காவின் பங்கு 39 சதவீதமாக உள்ளது. இதையடுத்து சீனாவின் பங்கு 13 சதவீதமாகவும் இந்தியாவின் பங்கு 3.7 சதவீதமாகவும் உள்ளது.

அமெரிக்கா தனது இராணுவத்துக்கு கடந்த 2020இல் 77,800 கோடி டொலர் செலவிட்டுள்ளது. சீனா 25,200 கோடி டொலரும் இந்தியா 7,290 கோடி டொலரும் செலவிட்டுள்ளன.

2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் இருந்தாலும் இந்த 3 நாடுகளும் முந்தையை ஆண்டை விட கூடுதலாக இராணுவத்துக்கு செலவிட்டுள்ளன. அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.7 சதவீதத்தை இராணுவத்துக்கு செலவிட்டுள்ளது. சீனா 1.7 சதவீதமும் இந்தியா 2.9 சதவீதமும் செலவிட்டுள்ளன.

2011 முதல் 2020 வரை அமெரிக்க இராணுவ செலவு 10 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் சீனாவின் இராணுவ செலவு 76 சதவீதமும் இந்தியாவின் ராணுவ செலவு 34 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.

உலகில் இராணுவத்துக்கு அதிகம்செலவிட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியாவை தொடர்ந்து, ரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. 2020இல் உலக நாடுகளின் மொத்த இராணுவ செலவு முந்தைய ஆண்டை விட 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் 5 நாடுகளின் இராணுவ செலவு, மொத்த இராணுவ செலவில் 62 சதவீதமாக உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மஸ்கெலியா பாடசாலையில் 35 மாணவர்கள் திடீர் சுகவீனம் – ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா புனித ஜோசப் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் கல்வி பயிலும்...

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்