பாண்டியன் ஸ்டோர்ஸ்’ல இருந்து குமரன் விலகப் போறேன்னு சொல்ல இதுவா காரணம்?

Date:

”பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து குமரன் வெளியேறப் போகிறாரா?”… சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக ரவுண்டு கட்டும் கேள்வி இதுதான். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலைப் பொறுத்தவரைக்கும் குமரன் – சித்ரா(மறைவு) நடித்த, கதிர் – முல்லை ஜோடிக்குத்தான் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு. ‘கதிர் ஆர்மி’, ‘முல்லை ஆர்மி’, ‘கதிர்-முல்லை ஆர்மி’ எனத் தனத்தனியே ஆர்மிக்கள் அமைத்து ஆதரவு தந்து வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் சித்ரா குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொள்ள அவருக்கு பதில் நடிகை காவ்யா முல்லை கேரக்டரில் நடிக்கவைக்கப்பட்டார்.

சித்ரா இறந்தது முதலே தொடரிலிருந்து நடிகர் குமரனும் வெளியேறப் போவதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. காவ்யாவை, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அதனாலேயே குமரன் விலகப் போவதாகவும் தெரிவித்தன அந்தச் செய்திகள்.

இது தொடர்பில் குமரன் தெரிவிக்கும் போது ”சமீபத்துல விஜய் டிவி விருதுகள் வழங்கும் விழா நடந்தது. கடந்தாண்டுக்கான இந்த விருதுகள்ல எனக்கு விருது கிடைக்கலைனு சமூக வலைதளங்கள்ல என்னுடைய ரசிகர்கள் சிலர் வருத்தப்பட்டாங்க. முதல்ல அதுபத்தி நான் எந்தக் கருத்தையும் சொல்லலை. ஆனாலும் தொடர்ந்து தங்களுடைய ஆதங்கங்களை ரசிகர்கள் பதிவு செஞ்சாங்க.

அதுக்கு நான், ‘என் கடமையை சரியா செஞ்சேன். விருது கிடைக்குது கிடைக்கலைங்கிறது பத்தி யோசிச்சிட்டு இருக்க வேண்டாமே… அடுத்து என்னங்கிறதைப் பார்ப்போம்’னு பதில் சொல்லியிருந்தேன். என்னுடைய இந்தப் பதிவை சிலர் தப்பாப் புரிஞ்சிட்டிருக்காங்கபோல. அப்படிப் புரிஞ்சிகிட்டவங்கதான் நான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ல இருந்து வெளியேறப் போறதா நினைச்சிருக்காங்க” என்றார் குமரன்.

spot_imgspot_img

More like this
Related

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா...

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்