26.3 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

கொரோனா பரவலுக்கு உக்ரேனிய சுற்றுலா பயணிகளின் வருகை காரணமா?

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள விரைவான கொரோனா வைரஸ் பரவல் அண்மையில் உக்ரேனிய பிரஜைகள் நாட்டிற்கு வந்ததன் மூலம் உருவாகியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று  பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாட்டிற்கு வந்தவுடன் உடனடியாக ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்ட உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

உக்ரேனிய பிரஜைகள் நாட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். தொற்றுநோய்க்கு மத்தியில் சஃபாரி சுற்றுப்பயணங்கள் சென்றனர்.

ஆகவே, புதிய திரிபடைந்த வைரஸ் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் மூலமாக நாட்டிற்குள் நுழைந்ததா என்பது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம் என்றார்.

கடைகளிற்கு பொருட்களை வாங்க, சந்தைக்கு செல்ல, நகரங்களில் அன்றாட நடவடிக்கைகளை நடத்தியதற்காக பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்,

அரசாங்கம் மற்றும் அதன் பங்காளிகளின் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை ஒரு கோவிட் -19 நெருக்கடியை சந்திக்கிறது. பொது மக்களின் செயல்களால் அல்ல என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியின் புத்த கயாவினது மகாபோதி ஆலய விஜயம்

east tamil

யாழில் எலிக்காய்ச்சலால் 99 பேர் பாதிப்பு!

Pagetamil

சாவகச்சேரி நகரசபையை முற்றுகையிட்டு போராட்டம்

Pagetamil

இரணைமடுச் சந்தியில் இளம் பெண் கடத்தல்

east tamil

4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணம்!

Pagetamil

Leave a Comment