2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டுமென்ற உண்மையான எண்ணம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய பொன்சேகா, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள உண்மையான சூத்திரதாரி தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் அல்ல என்றார்.
அரசியல்வாதிகள் மற்றும் பலர் கைது செய்யப்படுகிறார்கள். பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். மீண்டும் கைது செய்யப்படுகிறார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் தாக்குதலின் பின்னாலுள்ள சூத்திரதாரியை அரசாங்கம் எதிர்பார்க்கதாக எதிர்க்கட்சி நம்பவில்லையென தெரிவித்தார்.
விசாரணைகள் வெளிப்படையான முறையில் நடக்க வேண்டும். நீண்ட காலமாக 17 முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் இராணுவப் பயிற்சி பெற்றதாக நாடாளுமன்றத்தில் தெரியவந்தது,
எவ்வாறாயினும், தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரியை அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசியல் நன்மைகளைப் பெற மட்டுமே முயல்கிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான ஆட்சி எதிர்காலத்தில் அமையும் போது, தாக்குதல்கள் தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்யும் என்றார்.