24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

நேற்று 8 மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதை தொடர்ந்து, மரணங்களின் எண்ணிக்கை655 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள் வருமாறு-

பொல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 62 வயதான ஆண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த, 45 வயதான ஆண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம்கடந்த 25ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்துகமை பிரதேசத்தைச் சேர்ந்த, 53 வயதான ஆண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (26) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் குருதி விஷமடைவினால் ஏற்பட்ட அவையவங்கள் செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான ஆண் ஒருவர், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (26) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 காரணமான சுவாச செயற்பாடு செயலிழப்பு, குருதி விஷமடைவு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இழைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (26) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பகஹ பெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த, 48 வயதான ஆண் ஒருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனி என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான பெண் ஒருவர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (27) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (27) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு மற்றும் உக்கிரகொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரணைமடுச் சந்தியில் இளம் பெண் கடத்தல்

east tamil

4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணம்!

Pagetamil

மூன்று இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு

east tamil

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

Leave a Comment