24.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுங்கள்: ஆளுனர்!

வவுனியா சுற்றுலாமைய விவகாரத்தில் குத்தகைதராருடனான ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு வடமாகாண ஆளுனர்பணித்துள்ளார்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்டசெயலகத்தில் நேற்று காலை இடம்பெற்றது.

இதன்போது வவுனியா சுற்றுலாமைய விவகாரம் கலந்துரையாடப்பட்டது…

வவுனியாவில் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அனுமதியுடன் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டீன் கீழ் நகரசபையால் பொழுதுபோக்கு மையம்ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அமைக்கப்பட்ட பொழுதுபோக்கு மையம் நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

பின்னர் குறித்த குத்தகைதாரர் நகரசபையின் அனுமதி இல்லாமல் புதிதாக கட்டங்களை அமைத்து நிபந்தனைகளை மீறியிருந்ததாக நகரசபையினால் குற்றம்சாட்டப்பட்டதுடன், அந்த கட்டடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் குத்ததைதாரர் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்தமையால் அதனை உடைப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு ஒன்றை வழங்கியிருந்ததுடன், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இவ்வியடம் தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுனர்-

கட்டடத்தை அகற்றுவதற்கு எதிராகவே வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அந்தவிடயம்
நீதிமன்றில் இடம்பெற்றுவருவதால் அதில் தலையீடு செய்யாமல், ஒப்பந்ததாரருடான குத்தகைஒப்பந்தம் மீறப்பட்டிருக்கின்றமையை முன்னிறுத்தி அதனை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நகரசபைக்கு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சட்டத்தரணிகளின் கருத்துக்களை பெற்று ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment