யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் போது கண்டறியப்படும் சந்தேகத்திற்கிடமான மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
வீரியம் கூடிய உருத்திரிபடைந்த வைரஸின் தாக்கம் இலங்கையில் அதிகரித்து செல்லும் நிலையில் வடக்கில் கண்டறியப்படும் தொற்றாளர்களில் வீரியம் கூடிய வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ஆய்வு கூடத்துக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருத்திரிபடைந்த வைரசின் தாக்கம் இலங்கையில் உணரப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆய்வுக்கூடங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளில் கண்டறிய முடியாது. இதனால் வழமைக்கு மாறான விதத்தில் உள்ள மாதிரிகள் அல்லது சந்தேகத்திற்கிடமான மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.