26.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil
விளையாட்டு

WWE போட்டிகளில் ஒப்பந்தமாகியுள்ள கேரள பெண்!

உலகின் பிரபல்யமான மல்யுத்த பொழுது போக்கு அமைப்பான WWE நிறுவனத்தின் போட்டிகளில் பங்கேற்க, இந்தியாவின் கேரள மாவட்டத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அய்மானத்தை பூர்வீகமாகக் கொண்ட 26 வயதான சஞ்சனா ஜோர்ஜ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவில் நடந்த பல தேர்வுகளிலிருந்து அவர் தெரிவாகியுள்ளார்.

எம்.எம்.ஏ அல்லது கலப்பு தற்காப்பு கலை சண்டை மூலம் சஞ்சனா WWE உலகில் நுழைகிறார். தற்போது, ​​அவர் தனது முதல் சீசனுக்கு தயாராகி வருகிறார்.

சஞ்சனா தனது 17 வயதில் உள்ளூர் ஜிம்முக்குச் செல்லத் தொடங்கியபோது உடற் கட்டமைப்பில் ஈர்க்கப்பட்டார். பெங்களூருவில் எம்.எம்.ஏ பயிற்சியைத் தொடர்ந்தார்.

2019 ஆம் ஆண்டில், அவர் இந்தியாவில் நடந்த முதல் WWE முயற்சியில் பங்கேற்றார். மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்புக்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் போட்டியிட்டனர். இது அவரது தொழில் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

மல்யுத்தம், கபடி, கூடைப்பந்து, கிரிக்கெட் மற்றும் உடற்கட்டமைப்பு உள்ளிட்ட விளையாட்டு மற்றும் தடகளத்தில் பல்வேறு பின்னணியில் இருந்து வந்த 3,000 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் களத்தில் இருந்தனர். இறுதி சுற்றுக்கு இந்த பட்டியல் 80 (60 ஆண்கள் மற்றும் 20 பெண்கள்) ஆக சுருக்கப்பட்டது. மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி, இறுதி வெற்றியாளராக  சஞ்சனா தெரிவாகினார்.

COVID-19 தொற்றுநோய் தொடர்பான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்காவிற்கான அவரது பயணம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது. தடைகளைத் தளர்த்தியதைத் தொடர்ந்து கடந்த வாரம் அவர் அமெரிக்கா சென்றார்.  தற்போது, ​​புளோரிடாவின் ஆர்லாண்டோவில் அமைந்துள்ள WWE செயல்திறன் மையத்தில் பயிற்சி பெறுகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

Leave a Comment