உலகின் பிரபல்யமான மல்யுத்த பொழுது போக்கு அமைப்பான WWE நிறுவனத்தின் போட்டிகளில் பங்கேற்க, இந்தியாவின் கேரள மாவட்டத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அய்மானத்தை பூர்வீகமாகக் கொண்ட 26 வயதான சஞ்சனா ஜோர்ஜ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவில் நடந்த பல தேர்வுகளிலிருந்து அவர் தெரிவாகியுள்ளார்.
எம்.எம்.ஏ அல்லது கலப்பு தற்காப்பு கலை சண்டை மூலம் சஞ்சனா WWE உலகில் நுழைகிறார். தற்போது, அவர் தனது முதல் சீசனுக்கு தயாராகி வருகிறார்.
சஞ்சனா தனது 17 வயதில் உள்ளூர் ஜிம்முக்குச் செல்லத் தொடங்கியபோது உடற் கட்டமைப்பில் ஈர்க்கப்பட்டார். பெங்களூருவில் எம்.எம்.ஏ பயிற்சியைத் தொடர்ந்தார்.
மல்யுத்தம், கபடி, கூடைப்பந்து, கிரிக்கெட் மற்றும் உடற்கட்டமைப்பு உள்ளிட்ட விளையாட்டு மற்றும் தடகளத்தில் பல்வேறு பின்னணியில் இருந்து வந்த 3,000 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் களத்தில் இருந்தனர். இறுதி சுற்றுக்கு இந்த பட்டியல் 80 (60 ஆண்கள் மற்றும் 20 பெண்கள்) ஆக சுருக்கப்பட்டது. மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி, இறுதி வெற்றியாளராக சஞ்சனா தெரிவாகினார்.
COVID-19 தொற்றுநோய் தொடர்பான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்காவிற்கான அவரது பயணம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது. தடைகளைத் தளர்த்தியதைத் தொடர்ந்து கடந்த வாரம் அவர் அமெரிக்கா சென்றார். தற்போது, புளோரிடாவின் ஆர்லாண்டோவில் அமைந்துள்ள WWE செயல்திறன் மையத்தில் பயிற்சி பெறுகிறார்.