விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ நேற்று (26) நவலோகா மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவும் அந்த வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்வையிட நாமல் ராஜபக்ஷ வந்தாரா என்று ஊடகங்கள் கேள்வியெழுப்பின.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு நண்பரை பார்க்க தான் வந்ததாகவும், எம்.பி. ஹரின் பெர்னாண்டோ இங்கே இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியாது என்றும் பதிலளித்தார் நாமல் ராஜபக்ஷ.
இருப்பினும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஹரின் பெர்னாண்டோவுக்கு ஏதேனும் தெரிந்திருந்தால், அது நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று நாமல் ராஜபக்ஷ கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1