கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி வரும் நிலையில், பல பகுதிகளில் இயல்பு நிலை குலைந்துள்ளது.
லொக் டவுன் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதுடன், திட்டமிட்ட பல நிகழ்வுகள் தடைப்பட்டுள்ளன.
இதில், திருமண நிகழ்வுகள் பல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளினால் கொலாகலமாக திருமணத்தை நடத்த முடியாமல் போவது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம் திருமண ஜோடிகள் கொரோனா தொற்றிற்குள்ளாவது.
அண்மையில் கேரளாவில் மணமகன் கொரோனா தொற்றிற்குள்ளான நிலையில், மணமகள் பாதுகாப்பு அங்கி அணிந்தபடி திருமண பந்தத்தில் இணைந்த புகைப்படங்கள் வெளியாகின.
தற்போது, அதைப் போல மேலுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தின், ரத்லத் பகுதியில் மணமகன் கொரோனா தொற்றிற்குள்ளான நிலையில், திட்டமிட்ட திகதியில் சுகாதர அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் திருமணம் நடந்தது. இதில் மணமக்கள் இருவரும் பாதுகாப்பு உடையணிந்திருந்தனர்.