கிளிநொச்சி மாவட்டம் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாப்பான மாவட்டமாகவே இருக்கிறது. எனவே இந்த நிலைமையினை தொடர்ந்தும் பேணுவதற்கு
பொது மக்கள் சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளை பற்றி நடந்துகொள்ள வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று (27) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் எழுந்தமானதாக மேற்கொள்ளப்படுகின்ற பிசிஆர் பரிசோதனைகளில் கிடைக்கப் பெறுகின்ற முடிவுகளின் படி மாவட்டத்தைச் சேர்ந்த எவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக இல்லை. வெளிமாட்டங்களிலிருந்து
வருகின்றவர்களே தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டம் ஒரளவுக்கு பாதுகாப்பாகவே உள்ளது. இருப்பினும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது மக்கள் நடந்து கொள்ளவதோடு, சுகாதார துறையின் ஆலோசனைகளின் படியும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் எனத் தெரிவித்தார்.