கார்ல் பாவோலி என்ற நபர் தனது 39 வயதில் தாத்தாவாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் வெளிப்படுத்த, நெட்டிசன்களால் அதனை நம்ப முடியவில்லை. பேரனுடன் அவர் இருக்கும் வீடியோவும் வைரலாகி உள்ளது.
ஒரு நபர் சமீபத்தில் 39 வயதில் தாத்தா ஆகி விட்டதாக அறிவித்தார். ஆனால் இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்பற்றுபவர்கள் அதை நம்புவதாகத் தெரியவில்லை. கார்ல் பாவ்லி என்ற அவர், ஒரு குழந்தையை வைத்திருக்கும் டிக்டோக் வீடியோ ஒன்றை வெளியிட்டார். குழந்தை அவருடையது என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு இளமையாக இருக்கும் அவர், பதிவில் இது தனது பேரன் என பதிவிட நெட்டிசன்கள் தலையை சொறிய ஆரம்பித்து விட்டனர்.
குழப்பமான பயனர்கள், ‘என்னது தாத்தாவா?’ என கேள்வி எழுப்பியதுடன், ‘உங்களை பார்க்கும் போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் போல் தெரிகிறீர்கள்’ என பதிவிட்டனர். வேறு ஒருவர், ‘உங்கள் வயது என்ன என தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன். இவ்வளவு இளமையாக இருக்கும் நீங்கள் ஒரு தாத்தா, என்பதை வெளிப்படுத்தியதிலிருந்து, உங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். உங்கள் வயது என்ன?’ என கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த பாவ்லி, தான் தாத்தா ஆன கதையை தெரிவித்தார்.
‘நான் 39 வயதில் பழுத்த தாத்தாவாக இருப்பதற்கு காரணம், நானும் என் மனைவியும் 17 வயதான பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்தோம். அவருக்கு இப்போது 23 வயது. தற்போது அழகான குழந்தையின் தாய் அவர். என்னையும், என் மனைவியையும் தாத்தா, பாட்டியாக்கி, எங்கள் வாழ்க்கையின் மிகச் சிறப்பு வாய்ந்த சில தருணங்களை அனுபவிக்க வைத்துள்ளார்’ என பதிவிட்டிருக்கிறார்.
கார்லின் கதையை அறிந்த நெட்டிசன்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு பயனர், “ஆஹா … ஆச்சரியமாக இருக்கிறது! உங்கள் அனைவருக்கும் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்!” என பதிவிட்டார். மற்றொருவர், ‘‘அழகான தாத்தா, பாட்டி, மகள் மற்றும் பேரன்” என பதிவிட்டார்




