COVID-19 அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக, அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு பொதுமக்களிடம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய கருத்து தெரிவித்த போது, தற்போது நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவியிருப்பதை பி.சி.ஆர் சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட பல மாவட்டங்கள் மீண்டும் COVID-19 அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக மாறி வருவதாக கூறினார்.
இரண்டு நாட்களுக்கு மேல் சளி அறிகுறிகள் தென்பட்டால் அல்லது மார்பு வலி,,
உடல் வலி,மூட்டு வலி அல்லது சுவாச சிரமங்கள் நீடித்தால், சுய வைத்தியம் பார்ப்பதை தவிர்த்து, அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளனர்.
இந்த அறிகுறிகள் தென்படுபவர்கள் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று அவர்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை வழங்கவும், தேவையான சோதனைகளை மேற்கொள்ளவும் மற்றும் பொதுசுகாதார பரிசோதகருக்கு விவரங்களை வழங்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தேவையற்ற முறையில் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்,