கோவை பீளமேடு பகுதியில் பாலசுந்ததரம் என்பவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் தனது உறவினரை கடித்ததால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் என்ற நபர் மற்றொரு நபருடன் சேர்ந்து நாயை கட்டி வைத்து அடித்து கொன்றுளார்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற விலங்குகள் நல வாரிய மாவட்ட அலுவலர் பிரதீப் பிரபாகரன் ஆய்வு செய்ததில் கொடூரமாக நாயை கொன்றது தெரியவந்தது.
இதனைடுத்து அவர் கொடுத்த புகாரில் சீனிவாசன் மற்றும் உதவிய நபர் ஆகிய இருவர் மீதும் பீளமேடு காவல்துறையினர் இந்திய தண்டணை சட்டம் பிரிவு 429 – விலங்குகளை கொல்லுதல் மற்றும் விலங்குகள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1