வடக்கில் இன்று (26) மேலும் 15 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 249 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
சாவகச்சேரி வைத்தியசாலையில் 4 பேர் (வெளிநோயாளர் சிகிச்சைக்கு வந்த இருவர், தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த இருவர்), தெல்லிப்பளை வைத்தியசாலையில் 3 பேர் (தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த இருவர், தாதிய உத்தியோகத்தர் ஒருவர்), பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், யாழ் போதனா வைத்தியசாலையில் 3 பேர் (யாழ் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 2 பேர்), சண்டிலிப்பாயில் ஒருவர், மன்னார் பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
1
+1
2
+1