27.6 C
Jaffna
April 4, 2025
Pagetamil
உலகம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி;அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் பரிந்துரைப்பு!

இதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு தரப்பில், “கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது. 35,000 பெண்களுக்கு மாடர்னா மற்றும் பைஸர் கொரோனா தடுப்பூசிகளைப் பரிசோதனை செய்தத்தில் கருக்கலைப்பு, குறை பிரசவம் போன்ற எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்பட்டதோ அதே பக்கவிளைவுகள்தான் அப்பெண்களுக்கும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த அமெரிக்காவில் இதுவரை 39% மக்கள் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கொரோனா தொற்றும், இறப்பும் பெருமளவு குறைந்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில்தான் கொரோனா தடுப்பு மருந்து அதிகம் செலுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

ட்ரம்பின் “விடுதலை தின” வரிகள் அறிவிப்பு: சுண்டங்காய் சைஸ் இலங்கைக்கு இவ்வளவு பெரிய வரியா?

Pagetamil

கழிப்பறையில் வாழும் சீன யுவதி

Pagetamil

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடந்தது!

Pagetamil

ட்ரம்ப்- புடின் தொலைபேசி உரையாடல்: 30 நாள் எரிசக்தி கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!