30.6 C
Jaffna
April 12, 2025
Pagetamil
இலங்கை

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென் மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல்நிலை: காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இதையும் படியுங்கள்

மஹிந்த காலத்தை மிஞ்சும் அதிகார ஆட்டம்; யாழில் ஜேவிபி அமைச்சரின் தலைகால் புரியாத பேச்சு: முன்னாள் தவிசாளர் நிரோஷ் பதிலடி!

Pagetamil

அரசியலில் பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியை உருவாக்கி பௌத்த சிங்கள பேரின வாதத்தை நிறுவனமயப்படுத்தியது ஜே.வி.பி மாத்திரமே!

Pagetamil

மலேசியாவில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞன் பலி

Pagetamil

அம்பன் விபத்தில் குடும்பஸ்தர் பலி

Pagetamil

டிப்பரில் சிக்கி மூதாட்டி பலி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!