ரிஷாத்தின் விடுதலையை வலியுறுத்தி தனி மனிதன் போராட்டம்!

Date:

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌலவி ஒருவர் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வவுனியா கண்டிவீதியில் இன்று காலை 8 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

புனித நோன்புகாலத்தில் பொய்யான கதையை கூறி அவரை கைதுசெய்துள்ளனர், அவரை கைதுசெய்த முறையையும் அந்த அமைப்பையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.இரண்டு வருடமாக ஒரே குற்றச்சாட்டையே இவர்கள் தெரிவிக்கின்றனர். எமது தலைவர் கொலை செய்யக்கூடியவர் அல்ல. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவரை வெளியிலே விடுங்கள். உங்களது புலனாய்வுதுறையூடாக நீதியாக விசாரியுங்கள். அவர் எங்கும் ஓடமாட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுங்கள். எனவே ஜனாதிபதி பிரதமர் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். அவர் எப்போது விடுவிக்கப்படுகின்றாரோ அன்றே எனது போராட்டம் நிறுத்தப்படும்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்து அவர்களது குடும்பங்களுடன் நின்மதியாக வாழ்வதற்கு வழிசெய்யவேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற...

22வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

22 வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன்...

அமெரிக்க- சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஜி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்