கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் மரணமடைந்த நிலையில்
அவரது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டத்தில் அவருக்கு கொவிட் 19 தொற்று இல்லை
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறிதத் பெண் இரணைமடு விமானப்படை
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த பெண்ணிற்கு ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த
நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இப் பெண்ணின் மரணத்தை தொடர்ந்து அவர் கொவிட் 19 காரணமாக இறந்திருக்கலாம்
என பரபரப்பு ஏற்பட்ட அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பட்டு அதன்
முடிவுகளின் படி அவர் கொவிட் தொற்றினால் உயிரிழக்கவில்லை எனவும் மருத்துவ
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
உயிரிழந்த பெண் பாணந்துறை பகுதியைச்சேர்ந்த எம் இசற் எம் எச் பாத்திமா
சியானா (47) என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம்
கிளிநொச்சி வை்ததியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.