இப்பாகமுவ பன்னல பிரதேசத்தில் வீடொன்றினுள் நேற்றிரவு (24) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
பட்டாசினுள் உள்ள வெடி மருந்துகளை அகற்றி அவற்றை இரும்பு குழாய் ஒன்றில் செலுத்தி அதனை மின்சார கிரைண்டரை கொண்டு வெட்ட முற்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த 22 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள் இருவரும் சிகிச்சைக்காக குருணாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது



