பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலிருந்த 19 பேரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.
2020 ஒக்ரோபர் மாதம் முதல் சுகாதார விதிமுறைகளை மீறிய 3,470 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
போக்குவரத்தில் ஈடுபடும் போது முகக்கவசங்களை அணிந்து, தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பொலிஸ் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு டி.ஐ.ஜி பொதுமக்களிடம் அழைப்பு விடுத்தார்.



