இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வத்தளையைச் சேர்ந்த 18 வயது யுவதி, COVID 19 நிமோனியா மற்றும் இதய சிக்கல்கள் காரணமாக புதன்கிழமை ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.
நிட்டம்புவாவைச் சேர்ந்த 35 வயது ஆண் ஒருவர், COVID 19 நிமோனியா காரணமாக ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார்.
பன்னிபிட்டியை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக ஹோமாகம மருத்துவமனையில் நேற்று காலமானார்.
மகரகமவைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவர் கோவிட் நிமோனியா மற்றும் பல உடல்நலக் கோளாறுகள் காரணமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று காலமானார்.
சமீபத்தில் நாட்டிற்கு வந்த அவர், வீட்டில் சுய தனிமைப்பட்டிருந்த போது, கொரோனா அறிகுறிகள் வெளிப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.