28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

குட்மோர்னிங் சொல்லவில்லையாம்: அதிபர், ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவன் யாழ் போதனா வைத்தியசாலையில்!

ஊர்காவற்றுறையில் பாடசாலை அதிபரான பாதிரியார், ஆசிரியையினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவன் நேற்று (23) இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 24ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட மாணவன் ஊர்காவற்றுறை சென்.அன்ரனீஸ் வித்தியாலயத்தில் கல்வி கற்கிறார். சிறுவன் தந்தையை இழந்தவர். அவர் பாடசாலை விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கிறார்.

20ஆம் திகதி வகுப்பறையில் ஆங்கில ஆசிரியை வகுப்பறைக்கு நுழைந்த போது, மாணவன் எழுந்து குட்மோர்னிங் சொல்லி விட்டு இருந்து விட்டதாக கூறுகிறார். ஆனால் ஆசிரியர் பார்த்த போது அவர் இருந்து விட்டார்.

அவர் எழும்பவில்லையென கூறி, ஆசிரியை தடியினால் அடித்துள்ளார். அதில் தடியின் சிறு துகள் மாணவனின் கண்ணிற்குள் விழுந்து விட்டது. கண் வலியினால் மாணவன் அழ, வகுப்பறையை குழப்ப வேண்டாமென ஆசிரியை கூறிவிட்டு, வகுப்பை தொடர்ந்தார்.

வகுப்பு முடிந்ததும், விடுதிக்கு திரும்பிய மாணவன், விடுதியிலிருந்த- பாடசாலை அதிபரான- அருட்தந்தையிடம் விடயத்தை கூறினார். அவரும் அதை முறையாக கையாளவில்லை. சிறுவன் கண் வேதனையில் அழுததையடுத்து, இன்னொரு மாணவனுடன், அவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

ஆசிரியை அடித்து பாதிக்கப்பட்டதாக கூறக்கூடாது, நிலத்தில் விழுந்துதான் பாதிக்கப்பட்டதாக வைத்தியசாலையில் கூற வேண்டுமென விடுதியிலிருந்து கூறி அனுப்பப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் என்ன நடந்ததென விசாரிக்க, நிலத்தில் விழுந்துதான் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

அன்று இரவு மாணவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.

தாயாருக்கு மாணவன் தகவல் கொடுத்த விடயம் அறிந்த பாதிரியார், அவரை அழைத்து, என் தகவல் கொடுத்தாய் என கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மாணவனின் உடலில் கண்டல் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

22ஆம் திகதி காலையில் தாயார் பாடசாலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஆசிரியர்கள் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. 10.30 மணிக்கு தாயாரும், மாணவனும் பாடசாலையில் காத்திருந்தனர். 12.30 மணியளவில்தான் இரண்டு ஆசிரியர்கள், தாயாரை அழைத்து விடயத்தை கேட்டனர்.

ஆசிரியர்கள் அதிகார தோரணையில், தாயாருடன் கதைத்துள்ளனர். அதில் ஒருவர், “அடித்த ஆசிரியையிடம் இரண்டு நாள் சம்பளத்தை வாங்கித் தருகிறோம். நாளைக்கு வாருங்கள்“ என்றும் கூறினார்கள்.

அத்துடன் மகனை வேறு பாடசாலையில் அனுமதிக்க மாட்டீர்கள். என்ன நடந்தாலும் இங்கே தான் கல்வி கற்கவேண்டும் என மிரட்டும் தொனியிலும் கதைத்துள்ளனர்.

அதற்கு தாயார் தனது பிள்ளைக்கு ஆசிரியை அடித்தது தொடர்பில் ஏன் எனக்கு அறிவிக்கவில்லை? பிள்ளை வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று இருக்கிறான். அது தொடர்பில் கூட எனக்கு அறிவிக்கவில்லை. இது தொடர்பில் நான் விடுதி பொறுப்பாளரும், அதிபருமான பாதிரியாரை சந்தித்து கேட்டு விட்டே செல்வேன் என கூறியுள்ளார். ஆசிரியர்கள் இருங்கள் அதிபரை அழைத்து வருகின்றோம் என போனவர்கள் , அதிபரை அழைத்து வரவே இல்லை .

பாடசாலை முடிவடைந்து மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் 2.30 மணியளவில பாதிரியார் தாயாரை சந்தித்துள்ளார்.

தான் ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும், ஆசிரியை தொடர்பில் உரிய தரப்புக்களும் அறிவித்து விட்டதாகவும் , இனி அவ்வாறு நடக்காது என தாயாருக்கு சமாதானம் கூறி அனுப்பி விட்டு மாணவனை விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

தாயார் சென்றதும், விடுதியில் வைத்து,சக மாணவர்கள் முன்னால் சகட்டு மேனிக்குள் மாணவனை திட்டி அடித்துள்ளார்.

அதனால் மாணவனின் உடல் முழுக்க தழும்பு வரும் வரையில் அடித்துள்ளார். அத்துடன் மாணவன் மறுநாள் பாடசாலைக்கு தாயார் வந்து கதைத்து விட்டு சென்ற ஆசிரியர்களிடம் மன்னிப்பு கோருமாறும் கூறியுள்ளார். மறுநாள் மாணவன் ஆசிரியர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

தற்போது மாணவன் அடி காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலம் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு மேலதிக விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.-

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

வடமாகாண விவசாயிகள் கௌரவிப்பு

Pagetamil

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Pagetamil

ஐ.ம.ச தேசியப்பட்டியலுக்கு நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு!

Pagetamil

ஆசாத் சாலியை கைது செய்தது சட்டவிரோதம்!

Pagetamil

குடிநீர் வசதி இல்லாமல் பத்தனை கிரக்கிலி தோட்ட பிரதேச மக்கள்

east pagetamil

Leave a Comment