வவுனியாவில் 12 பேருக்கு கோரோனா தொற்று இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா கற்பகபுரம் பகுதியில் இரு குடும்பங்களை சேர்ந்த 9 பேருக்கும், சிறைச்சாலையில் ஒருவருக்கும், யாழில் இருந்து வருகைதந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சித்திரை வருடப்பிறப்பினை கொண்டாடுவதற்காக திருகோணமலையில் இருந்து வவுனியா கற்பகபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருகைதந்த நபர் ஒருவருக்கு, திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் வருகைதந்த வவுனியா கற்பகபுரம் பகுதியில் உள்ள சிலருக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது.
அதற்கமைய 9 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. அத்துடன் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் ஒருவருக்கும், யாழில் இருந்து வருகைதந்த இருவரும் என 12 பேர் சமூகத்தில் இருந்து தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.