26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

கொரோனா உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கத்தக்க எண்ணிக்கையை விட, அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே ஊடகங்களுடன் பேசும்போது இதனை தெரிவித்தார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தத் தவறினால்,  மற்றொரு லொக் டவுன் அல்லது கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றார்.

சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்ய கடந்த ஆண்டும் மீண்டும் மீண்டும் இதே செய்தி வெளியிடப்பட்டது. இப்பொழுது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுவது உள்ளிட்ட அனைத்து சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

தற்போது, 35 கொரோனா நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

வேகமாக பரவி வரும் திரிபடைந்த கொரோனா வைரஸினால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் விழிப்புடன் இருப்பது மிக முக்கியமானது என்றார்.
.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!

Pagetamil

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

Leave a Comment