26.9 C
Jaffna
January 21, 2025
Pagetamil
குற்றம்

வவுனியாவில் திருமணத்திற்கு சேர்க்கப்பட்ட நகைகள் கொள்ளை: படுத்துக் கொண்ட மோப்பநாய்!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள இளமருதங்குளம் பகுதியில் நேற்று (21) நண்பகல் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த 7 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர் .

நேற்று (21) பிற்பகல் இளமருதங்குளம் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

வீட்டிலுள்ளவர்கள் கிராம அலுவலகத்திற்கு சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளரின் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் திருணமத்திற்காக சேர்த்து வைக்கப்பட்ட தாயின் தாலிக்கொடி, மோதிரம், காப்பு என்பனவற்றுடன் சிமாட் போன், சிறியதொகைப் பணம் போன்றவற்றை திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர் .

கிராம அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் பின் கதவு திறக்கப்பட்டிருந்ததுடன் அங்கிருந்து திருடன் ஒருவர் தப்பி ஓடுவதையும் அவதானித்தவர்கள் அயலவர்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்ற பொலிசார் திருடன் தப்பிச் சென்ற வழிகளை இனங்காட்டிய மோப்ப நாய், வீட்டிற்குப்பின்புறமாக உள்ள குளத்திற்கு அருகில் படுத்துக்கொண்டது. திருடனின் செருப்பு அங்கு காணப்பட்டுள்ளதை அடுத்து ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் இவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களாக இருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் இளமருதங்குளம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களின் இச்சம்பவம் இரண்டாவது என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

கடன் தொல்லையால் இளம் தம்பதி விபரீத முடிவு: காட்டுக்குள் அருகருகாக சடலங்களாக மீட்பு!

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியைக்கு விளக்கமறியல்!

Pagetamil

வெளிநாடு சென்ற காதலன் தொடர்பு கொள்ளாததால் இளம்பெண் விபரீத முடிவு

Pagetamil

வவுனியா சிறைச்சாலை கூடா நட்பு: கணவனின் நண்பனுடன் பியர் குடித்த பின் நடந்த கொடூரம்!

Pagetamil

Leave a Comment