எவ்வளவோ பேரு வெயிலில் நின்னு, இரத்தம் சிந்தி சிந்தி, கடுமையாக உழைத்து, கஷ்டத்தையும், அவமானத்தையும் கடந்து வந்து எதாவது ஒரு சீன்ல தலையைங்காடி விட மாட்டோமா, சினிமாவில் நடிக்க ஒரு சின்ன வாய்ப்பு கிடைக்காதா, என்று ஏங்கி கொண்டிருக்கும் நிலையில், சில பெண்கள் டிக் டாக் App மூலம் பிரபலமாகிட்டு இருந்தாங்க. அப்படி சில Funny வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தான் பார்கவ். இவர் ஒரு டிக் டாக் பிரபலம்.
“ஓ மை காட்… ஓ மை காட்..“ என்று மொக்கை காமெடி அடிக்கும் காரணத்திற்காகவே இவரை உள்ளே வைக்க வேண்டும்.. ஆனால், இவர் செய்த செயலினால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
கடந்தாண்டு டிக்டாக் தடைசெய்யப்பட்டாலும், அதன் பின் யூடிபிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் பார்கவ். இந்தநிலையில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி அதன் பின் அவரிடம் இவரது காதலை கூறியுள்ளார்.
அதற்கு அந்த சிறுமி மறுக்க, உடனே இவரின் இன்னொரு முகத்தை காட்ட துவங்கினார். அப்பாவியான அந்த சிறுமியிடம், “உன்னோட அப்படி இப்படி புகைப்படங்களும், வீடியோக்களும் என்கிட்ட இருக்கு. நான் சொல்லுறத கேட்க்கலனா, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்” என்று மிரட்டி உள்ளார்.
பயந்து போன அந்த இவரின் ஆசைக்கு அடங்க அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனால் காலப்போக்கில் சிறுமியின் வீட்டாருக்கு இதை பற்றி தெரியவர,
ஏப்ரல் 1-ம் தேதி விசாகப்பட்டினத்தின் பெண்டூர்த்தி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளார்கள். இந்தநிலையில் அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
கற்பழித்த நபர் பார்கவ் மீது போக்சோ சட்டத்தைத் தாண்டி, பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை, பெண்களுக்கு எதிரான தாக்குதல் அல்லது கிரிமினல் குற்றம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.